ஒரே நாளில் ரூபாய் மதிப்பு கிடுகிடு

மும்பை:  அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அவ்வப்போது உயர்ந்தாலும், பெரும்பாலும் சரிவையே சந்தித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான நாடாளுமன்ற கருத்துக்கணிப்புகளை தொடர்ந்து ரூபாய் மதிப்பு அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு ₹70.23 ஆக இருந்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோது ₹70.36 ஆக இருந்தது. பின்னர் மதிப்பு 79 காசு உயர்ந்து 69.44 ஆனது. மாலை வர்த்தக முடிவில் 49 காசுகள் அதிகரித்து ₹69.74ஆக நிலை பெற்றது. கடந்த 2 மாதங்களுக்கு பிறகு ரூபாய் மதிப்பு முதல் முறையாக ஒரே நாளில் அதிகரித்ததற்கு, மீண்டும் பாஜ வரும் என்ற கருத்துக்கணிப்புகளே காரணம். இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த மார்ச் 18ம் தேதி ரூபாய் மதிப்பு 57 காசு அதிகரித்திருந்தது.

Advertising
Advertising

Related Stories: