கோவில்பட்டி அருகே கண்மாயில் மண் அள்ள எதிர்ப்பு: லாரி, ஜேசிபி ஏந்திரங்கள் சிறைபிடுத்து போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கண்மாயில் மண் அள்ளுவதை எதிர்த்து பொதுமக்கள் லாரி மற்றும் மண் அள்ளும் ஜேசிபி ஏந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவில்பட்டியை அடுத்த ஆவல் நத்தம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் வண்டல்மண் அள்ளுவதாக அனுமதி வாங்கிவிட்டு அதிக அளவில் மண் அள்ளுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராமமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: