7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்: அற்புதம்மாள் தொடங்கி வைத்தார்

சென்னை:7 பேர் விடுதலை குறித்து தமிழக  அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? என்று, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோரிக்கை.

இதற்காக தமிழக ஆளுநருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த போராட்டத்தை சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடங்கி வைத்தார். இதேபோல் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தேனீ, கம்பம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் கட்சி வேறுபாடு இன்றி வெவ்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.  

Related Stories: