தடகள வீராங்கனை டூட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க முயற்சி!

டெல்லி : இந்திய தடகள வீராங்கனை டூட்டீ சந்த், தனது தோழியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது குறித்து பேசியுள்ள டூட்டீ சந்த், என்னுடைய தன்பாலின விருப்பத்துக்கு எனது பெற்றோரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் என்னுடைய சகோதரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் டூட்டீயின் சகோதரி சரஸ்வதி சந்த் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது:

டூட்டீ காதலிப்பதாக கூறிய அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் திருமணம் செய்யுமாறு அவளை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் வந்துள்ளனர். இவை அனைத்தும் டுட்டீயின் சொத்திற்காகவும், அவர்களின் சுயலாபத்திற்காகவும் செய்துள்ளனர். மேலும் சர்வதேச போட்டிகளில் இருந்து நீக்கி, அவளை பிரச்சனைகளில் சிக்க வைக்க ஏற்படுத்தப்பட்ட சதி திட்டம் என்று கூறியுள்ளார்.


Tags : Athlete ,Duty Market , Dutee Chand's ,Sprinter, 'Blackmailed' , Partner
× RELATED நீங்கள் இழந்த சொத்துகள், பொருட்களை...