குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதவள்ளியின் சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனுத்தாக்கல்

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சரணடைந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமுதவள்ளி, அவரது கணவர் ரவிசந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடை தரகர்களான பர்வின், நிஷா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

குழந்தைகள் விற்பனையில் தொடர்புடைய அமுதவள்ளியின் சகோதரரான நந்தகுமாரை சிபிசிஐடி போலீசார் தேடிவந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நாளை நந்தகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

Related Stories: