வால்பாறை மலைப்பாதையில் குவியும் சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், குரங்கு அருவி, வால்பாறை  உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பயணிகள் வந்து செல்கின்றனர்.  ஒவ்வொரு சீசனை பொறுத்தும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.   இதில் ஆழியாருக்கு வருவோர், அருகே உள்ள குரங்கு அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மழை இருக்கும் காலகட்டத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வரும்போது கூட்டம் அதிகமாக இருக்கும். இதில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை குரங்கு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

   

 அதன்பின் வெயிலின் தாக்கத்தால், கடந்த மார்ச் மாதம் துவக்கத்தில் அருவியின் ஓரத்தில் நூல்போன்று வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து, சில நாட்களில் முற்றிலுமாக நின்று, வெறும் பாறையது. இதனால் குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது பள்ளி கோடை விடுமுறையையொட்டி ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர், குரங்கு அருவிக்கு செல்வதை தொடர்ந்தனர்.

 இருப்பினும் பல சுற்றுலா பயணிகள் பலரும், வன சோதனை சாவடியில் கட்டணம் செலுத்தி குரங்கு அருவியை பார்த்துவிட்டு, வால்பாறை மலைபாதையில் அட்டகட்டி வரை சென்று மகிழ்கின்றனர்.  வால்பாறை மலைப்பாதையில் வாகனத்தில் சென்று குவியும் சுற்றுலா பயணிகள், தடையை மீறி அடர்ந்த வனத்திற்குள் செல்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: