×

அமைச்சரவையில் இருந்து ஓம் பிரகாஷ் ராஜ்பர் நீக்கம்: மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையை ஏற்று ஆளுநர் நடவடிக்கை

லக்னோ: உத்திரப்பிரசே அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பார் 2017-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ளார். மேலும், உத்திரப்பிரதேச அமைச்சரவையில் எஸ்.பி.எஸ்.பி. கட்சியின் சார்பில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சராக உள்ளார். இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் ராஜ்பார் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.

ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்க உத்திரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக் மறுத்துவிட்டார். இந்நிலையில் ஓம் பிரகாஷ் ராஜ்பாரை பதவி நீக்கம் செய்ய உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஆளுநர் ராம் நாயக்குக்கு பரிந்துரை கடிதம் இன்று அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Tags : Governor ,Om Prakash Rajbar , Governor removes Om Prakash Rajbar from ministry
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...