குட்டி யானை இறந்த ஆத்திரத்தில் ஊருக்குள் புகுத்த தாய் யானை: பொது மக்களை தாக்கியதில் ஒருவர் பலி

அஜ்னாசுலி:மேற்கு வங்க மாநிலத்தில், குட்டி யானை இறந்த ஆத்திரத்தில், தாய் யானை பொதுமக்களை தாக்கி ஒருவரை கொன்றது. அஜ்னாசுலி என்ற இடத்தில் சில காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுத்தன. அதில் ஒரு பெண் யானை பிறந்து சில வாரங்களே ஆன  தனது குட்டியுடன் இருந்துள்ளது. இந்நிலையில் யானைகளை விரட்டுவதற்க்காக அஜ்னாசுலி மக்கள் கற்களை வீசியுள்ளனர். இதனால் யானைகள் சிதறி ஓடியபோது கால் இடறி விழுந்ததில், குட்டி யானை நிகழ்விடத்திலே  உயிர் இழந்தது. அப்போது செல்பீயும்,வீடியோவையும் எடுத்த பொது மக்களை யானைகள் விரட்டின.அப்போது கால் இடறி விழுந்த  ஷாயலான் மேகாடோ என்ற இளைஞரை யானைகள் கடுமையாக தாக்கின. இதில் அவரும் பலி ஆனார். இதையடுத்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயச்சித்து வருகின்றனர். 

Related Stories: