ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் எதிரொலி : ஆஸ்திரியாவில் போராட்டம் வெடித்ததால் திடீர் தேர்தல்

வியன்னா : ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக ஆஸ்திரிய துணை பிரதமர் ஹெய்ன்ஸ் பதவி விலகியதை தொடர்ந்து வரும் செப்டம்பரில் பொது தேர்தல் நடத்த அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரிய நாட்டின் அரசு ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்ததில் ஆதாயம் அடைந்தது உறுதியானதால் துணை பிரதமர் ஹெய்ன்ஸ் கிறிஸ்டியன் பதவி விலகினார். இருப்பினும் ஊழல் அரசை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தக் கோரி ஆஸ்திரியாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு உடனே தேர்தல் நடத்துமாறு அதிபர் அலெக்ஸாண்டரிடம் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் பரிந்துரை செய்தார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடத்த அதிபர் அலெக்ஸாண்டர் வான் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான ஆஸ்திரியாவில் மைய வலதுசாரி மக்கள் கட்சி தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வலதுசாரி மக்கள் கட்சியின் உறுப்பினரான பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: