மோடியின் பிடியில் உள்ள தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மோடியின் பிடியில் உள்ள தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று செங்கல்பட்டில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையர் அசோக்லவாசா, தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டை கண்டித்துள்ளார். தேர்தல் ஆணையர் நடுநிலைமையைத் தவறியுள்ளது. மோடியின் அசைவுபடி தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் பிடியில் தேர்தல் நடந்திருப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆணையத்தை கலைப்பதற்கு சட்டரீதியாக வழிமுறைகள் இருக்கின்றதா என யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் பிரச்னைகளை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் அகதிகள் போல் திரிகின்றனர். தமிழகத்தில் கடுமையான வறட்சி பாதித்துள்ளது. ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அரசு கவலைப்படவில்லை. இந்த வறட்சியைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை சீர்படுத்தலாம். ஆனால் எதற்கெடுத்தாலும் தேர்தலையே காரணம் காட்டுகின்றனர். இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories: