ஆஸ்திரேலியா பொது தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரீசன் வெற்றி

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரீசன் வெற்றி பெற்றுள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பில் ஷார்டன் பதவி விலகினார். ஆஸ்திரேலியாவில் 31வது பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 1 கோடியே 60 லட்சம் பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில், எதிர்க்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அது தவறாகி ஸ்காட் மோரீசன் வெற்றிபெற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 151 இடங்களில், ஒரு கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க 76 இடங்கள் தேவை. ஆனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கூட்டணி 74 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான லேபர் கட்சி 66 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் பிரதமர் ஸ்காட் மோரீசன்(51) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Related Stories: