பொருளாதார சரிவு தொடர்ந்து நீடிக்கும்

புதுடெல்லி: பொருளாதார சரிவு மேலும் சில காலம் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாக மத்திய அரசு புள்ளி விவரம் வெளியிட்டது. ஆனால், மத்திய அரசின் புதிய கணக்கீட்டு முறை தவறு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு ஏற்ப, பொருளாதார சரிவை நிரூபிக்கும் பிற புள்ளி விவரங்களும் வெளியாகின. கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 227 மில்லியன் டன்களாக இருந்தது, நடப்பு ஆண்டில் இது 233 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஈரான், வெனிசூலா மீதான தடையை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதால், பொருளாதார சரிவு மேலும் சில காலம் நீடிக்கும் எனநிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: