டெபிட் கார்டு பயன்பாடு 27 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது, கட்டணம் செலுத்துவது 27 சதவீதம் அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக, டெபிட் கார்டுகள் பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது மீண்டும் பணப்புழக்கம் அதிகரித்து விட்டது. இருப்பினும், டெபிட் கார்டு மூலம், பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் கடைகளில் பில் தொகைக்கு பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. பாயின்ட் கடந்த மார்ச் மாதத்தில் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க 89.1 முறை டெபிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பாயின்ட் ஆப் சேல் கருவி (பிஓஎஸ்) மூலம் பணம் செலுத்த 40.7 கோடி முறை டெபிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், டெபிட் கார்டில் பிஓஎஸ் மூலம் பில் தொகை செலுத்துவது 27 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது 15 சதவீதம் குறைந்துள்ளது. 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பிஓஎஸ் கருவி மூலம் கடைகளில் பில் தொகை செலுத்துவது இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளது. கிரெடிட் கார்டுகள் மூலம் கடைகளில் பில் தொகை செலுத்துவது 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 12.7 கோடியாக இருந்தது. இது கடந்த மார்ச் மாதத்தில் 16.2 கோடியாக உள்ளது.

Related Stories: