கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி சொந்த நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்று விடலாம்: இம்ரான்கான்

பாகிஸ்தான்: கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி சொந்த நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்று விடலாம் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் நம்பிக்கை நிறைவேறாமல் போனது. கராச்சி அருகே கடல் பகுதியில் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அமெரிக்காவை சேர்ந்த  எக்சான் மொபில் மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட 4 நிறுவனங்கள் கடலுக்கு அடியில் எண்ணெய் இருக்கிறதா என்று துளையிட்டு ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தன.

4 மாதங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், எண்ணெய் இருப்பதற்கான அறிகுறி இல்லாதால் துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கச்சா எண்ணெய் இல்லை என்ற செய்தி இம்ரான்கானின் நம்பிக்கையை தகர்த்து விட்டது.

Related Stories: