தேர்தல் விதிகளுக்கு முரணாக பிரதமர் மோடி கேதார்நாத்துக்கு யாத்திரை சென்றுள்ளார்: திரிணாமுல் காங்கிரஸ் புகார்

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேதார்நாத், பதிரிநாத் சென்றுள்ள நிலையில், கேதார்நாத் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதியுடன் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த 17-ம் தேதி நிறைவு பெற்றது. இதனால் கடந்த ஒன்றரை மாதங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தலைவர்கள் தற்போது சற்று ஓய்வு கிடைத்துள்ளது.

இதை பயன்படுத்திக் கொண்டு பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் பாரம்பரிய பஹாரி உடை அணிந்து, கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.  இதனையடுத்து பிரதமர் மோடி, உத்தரகாண்டின் பாரம்பரிய உடையான பஹாரில் கோயிலுக்கு வந்திருந்தார். மேலும், அதன் மேல் காவி துண்டை போர்த்தியபடி சிவன் கோவிலில் வழிபட்டார். பின்னர் உறைய வைக்கும் குளிரில் கேதார்நாத் கோயிலில் உள்ள பனிக்குகையில் மோடி தியானம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை குகையில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி;

உத்தராகண்ட் கேதார்நாத்தில் வழிபாட்டதை நான் அதிஷ்டமாக நினைக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுபூர்வமாக உறவு உள்ளது. கேதார்நாத்தின் வளர்ச்சிக்காக நான் பணியாற்றி கொண்டிருக்கிறேன். எனக்காக எதையும் கேட்டு நான் கோயிலுக்கு செல்வது இல்லை. இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் தான் கேதார்நாத்தில் பிரார்த்தனை செய்தேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம், எடுப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தேர்தல் விதிகளுக்கு முரணாக கேதார்நாத்துக்கு யாத்திரை சென்றுள்ளார் பிரதமர் மோடி என திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது. அவர் கேதார்நாத் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த காட்சி டிவி-க்களில் ஒளிபரப்பானது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில்  புகார் செய்யப்பட்டுள்ளது.  கேதார்நாத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த மோடி தேர்தல் விதிகளை மீறியதாக புகார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் உள்ள சூழலில் பிரதமரின் பயணம் சட்டவிரோதமானது. அவரது செயல்பாடுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ஒருவகையில் வாக்களர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈரக்கக்கூடிய செயலாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: