பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டின் அருகே குண்டுவெடிப்பு.... ஒருவர் பலி

பெங்களூரு : பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் வீடு அருகே குண்டு வெடித்ததில் வெங்கடேசன் எனபவர் உயிரிழந்தார். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வியாலிக்காவல் என்ற பகுதியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னா வீட்டின் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எம்.எல்.ஏ. முனிரத்னா வீட்டில் இருந்த சமயத்தில் அவரின் வீட்டின் அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பு  சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிகழ்ந்துள்ளது. இதில் வெங்கடேசன் எனபவர் உயிரிழந்தார். ஏற்கனவே இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு நகருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. அதனால் அதிதீவிர பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

Related Stories: