ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்துடன், 7 கட்டமாக அறிவிக்கப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுக்கு வருகிறது.  23-ம் தேதி நடந்து முடியவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிறது. இதில், ஆளும் பாஜ, காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது என கருதப்படுகிறது. இருப்பினும், மாநில கட்சிகளை கூட்டணியில் இழுத்து பாஜ மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுப்பதில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 2 நாட்களில் 2வது முறையாக ராகுலை சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி முடிவுகள் பற்றிய முக்கிய ஆலோசனை முடிவுகள் எடுப்பதற்கான ஒரு சந்திப்பாக இது பார்க்கபப்டுகிறது.

ஏற்கனவே நேற்று ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்திரபாபு நாயுடு லக்னோவில் நேற்று மாலை சந்தித்து பேசினார். கடந்த ஒரு வாரத்தில் 4-வது முறையாக ஆந்திர முதல்வர் ராகுல்காந்தியை கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: