சூலூரில் 10 மணி அளவில் 185 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எலஞ்சிபாளையம் வாக்குச்சாவடியில் கடந்த 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertising
Advertising

இதனை தொடர்ந்து வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில் கோவை மாவட்டம் எலஞ்சிபாளையம் 37-ம் எண் வாக்குச்சாவடியில் 185 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 14.40% வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த 1 மணி நேரமாக வாக்குப்பதிவானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இயந்திரத்தை சரி செய்யும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: