மொடக்குறிச்சி அருகே மீன்பிடி வலையில் சிக்கிய சாமி சிலைகள்: போலீசார் விசாரணை

மொடக்குறிச்சி: ஈரோட்டை அடுத்த பாசூரில் காலிங்கராயன் வாய்க்காலில் வலம்புரி விநாயகர் சிலை, நடராஜர் சிலை மீட்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பாசூர் ரயில்வே கேட் அருகே காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேங்கிய வாய்க்கால் நீரில் மீன் பிடிப்பதற்காக நேற்று அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (25) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் காலிங்கராயன் வாய்க்காலில் வலை விரித்துள்ளனர். அப்போது வலையை இழுக்க முடியாமல் திணறியுள்ளனர். 5 பேரும் வலையை இழுந்த போது வலையில் சாக்குமூட்டை சிக்கியுள்ளது. அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் வலம்புரி விநாயகர் சிலை, நடராஜர் சிலை இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிலைகள் குறித்து விசாரணை நடத்தினர். இதையறித்த கொடுமுடி மண்டல துணை வட்டாட்சியர் வான்மதி, ரமேஷ், கார்த்தி ஆகியோர் 2 சிலைகளையும் மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சிலைகள் ஐம்பொன் சிலைகளா? அல்லது செம்பு சிலைகளா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: