உலக கோப்பையில் விளையாட கேதார் ஜாதவ் தயார்: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட, இந்திய அணி ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவ் முழு உடல்தகுதியுடன் தயார் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய கேதார் ஜாதவ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது இடது தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்தார். தொடரில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்த அவர், உலக கோப்பையில் விளையாடுவது கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில், கேதார் முழு உடல்தகுதியுடன் உலக கோப்பையில் களமிறங்கத் தயாராக உள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. மே 22ம் தேதி லண்டன் பயணமாகும் இந்திய அணியுடன் அவர் இணைந்துகொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டரான கேதார் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் வலு சேர்ப்பதுடன், பந்துவீச்சிலும் சிறப்பாக பங்களிப்பார் என எதிர்பார்க்கலாம். மே25ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள பயிற்சி ஆட்டத்தில் கேதாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது.

Tags : Kedar Jadhav ,World Cup ,Announcement ,BCCI , World Cup, Play, Kedar Jadhav, Ready, BCCI
× RELATED உலகக் கோப்பை சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்