மன நலம் பாதித்தவர்களுக்கு காப்பீடு மறுக்க கூடாது

பெங்களூரூ: காப்பீடுகள் முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஐஆர்டிஏஐ மருத்துவ காப்பீடு மற்றும் பொது காப்பீடு ஆகியவை தொடர்பாக சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

விதிமுறைகள் வருமாறு:

* மூளை வளர்ச்சி குறைபாடு, சிறுமூளை பாதிப்பு, ஆட்டிசம், பேச்சு குறைபாடு உள்பட வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுக்கக் கூடாது. பாலினம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் காப்பீடு வழங்குவதில் பாரபட்சமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படக் கூடாது.

* அதேபோல், உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெறுபவருக்கு காப்பீடு செய்யவோ அல்லது இழப்பீடு தொகை வழங்கவோ மறுக்க கூடாது. நோயாளி இனிமேல் உயிர் பிழைக்கமாட்டார் என்று சான்றிதழ் வழங்கப்பட்டவருக்கு இழப்பீடு தொகையை வழங்க மறுக்கலாம். ஆனால், அதுவரையில் அந்த நோயாளிக்கு காப்பீடு செய்யவோ அல்லது செலவுத்தொகையை வழங்கவோ மறுக்கக் கூடாது.

* இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்கள் அதிக அளவில் ரத்தப்போக்கு, ஹார்மோன் மாறுதல் அல்லது மாதவிடாய் பிரச்னையால் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்படும் பெண்களுக்கு சிகிச்சை பெற வசதியாக மருத்துவ காப்பீடு அளிக்க வேண்டும். சிகிச்சைக்கான காப்பீடு தொகையை வழங்க மறுக்கக் கூடாது.

* பைக் சாகச பயணம், பாராசூட் சாகசம், ஆற்றில் படகு பயணம், சிறிய ரக கார் பந்தயம், பாரம்பரியமான ஜல்லிக்கட்டு, கம்பலா போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மருத்துவ காப்பீடு செய்ய மறுகக்கூடாது. காப்பீடு வழங்க வேண்டும் என்ற புதிய விதியால் வீர விளையாட்டுகளில் ஆர்வமிக்க விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மற்றொரு முக்கியமான முடிவு என்னவென்றால், 8 ஆண்டுகள் தொடர்ந்து காப்பீடு செய்திருப்பவர்கள், புகைப்பிடிப்பவராக தெரியவந்தாலோ அல்லது ஏற்கனவே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்தாலும் அவர்களுக்கு காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க மறுக்க முடியாது. காப்பீடு வழங்க வேண்டும் என்ற புதிய விதியால் வீர விளையாட்டுகளில் ஆர்வமிக்க விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Related Stories: