தேர்தல் முடிவு எப்படியோ? கலக்கத்தில் முதலீட்டாளர்கள்

மும்பை: மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற கலக்கத்தில் பங்குச்சந்தைகள் இருக்கின்றன. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால், தங்களது முதலீடுகள் என்னவாகுமோ என்ற அச்சத்தில் இந்தியாவில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உறைந்துள்ளனர். பல்வேறு பிரச்னைகளில் எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பு, விவசாயிகளின் போராட்டம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 2014ல் கிடைத்த வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், என்ன மாறுதல்கள் ஏற்படுமோ என்ற அச்சம் பொருளாதார உலகில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில், பங்குச்சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதேபோல் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அப்போதும் பெரும் மாறுதல் ஏற்படும் என்று பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் கூறினார். பங்குச்சந்தை, பணப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். இதனால், தேர்தல் முடிவுகள் குறித்த அவர்களது எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. டாலருடன் ரூபாய் மதிப்பு 75 பைசா அளவுக்கு சரிந்துள்ளது இவை எல்லாம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் துவக்கத்தில் சீனாவுடனான வர்த்தக மோதல் காரணமாக சில அதிரடி முடிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்தார். இதனால் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. டாலருடனான ரூபாயின் மதிப்பு 1.2 சதவீதம் சரிந்தது. செவ்வாயன்று பங்குச்சந்தைகளில் கடந்த 9 நாட்கள் வர்த்தகத்தைவிட சரிவை சந்தித்து நின்றுவிட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மே 23ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் புதிய அரசு பதவியேற்ற பின்னர்தான் பொருளாதாரத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது பற்றியும் பங்குச்சந்தைகளில் இயல்பான நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் சீனாவுடனான வர்த்தக மோதல் காரணமாக சில அதிரடி முடிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்தார். இதனால் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

Related Stories: