கேதார்நாத்தில் பிரதமர் சாமி தரிசனம்

கேதார்நாத்: தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் சென்று சாமி தரினம் செய்தார். மக்களவை தேர்தலில் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான பிரசாரமும் முடிவடைந்துவிட்டது. இதனால் கடந்த ஒன்றரை மாதங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தலைவர்கள் தற்போது சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம்  செய்தார்.

இதற்காக பிரதமர் மோடி நேற்று காலை ஜாலி கிராண்ட் விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பாரம்பரிய பஹாரி உடை அணிந்து, கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.  

முன்னதாக அரைமணி நேரம், பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த கோயில் பகுதிகளின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 முறை பிரதமர் கேதார்நாத் கோயிலுக்கு வந்து சாமி தரசனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மோடி இன்று பத்ரிநாத் கோயிலுக்கு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி கேதார்நாத் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என டி.ஜி.பி. அசோக் குமார் கூறினார்.

பனிக்குகையில் தியானம்:

பிரதமர் மோடி, உத்தரகாண்டின் பாரம்பரிய உடையான பஹாரில் கோயிலுக்கு வந்திருந்தார். மேலும், அதன் மேல் காவி துண்டை போர்த்தியபடி சிவன் கோவிலில் வழிபட்டார். பின்னர் உறைய வைக்கும் குளிரில் கேதார்நாத் கோயிலில் உள்ள பனிக்குகையில் மோடி தியானம் மேற்கொண்டார். பிரதமரின் தியானத்தையொட்டி, கோயில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் சுமார் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது.

Related Stories: