‘பாஜ.வில் இருந்து பிரக்யா சிங்கை நீக்க வேண்டும்’

புதுடெல்லி:  பிரக்யா சிங்குக்கு  சமூக சீர்திருத்தவாதி கைலாஷ் சத்யார்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போபால் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளரான பிரக்யா சிங் தாகூர், `மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்’ என்றார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடியும் பிரக்யாவை கண்டித்தார். இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற சமூக சீர்திருத்தவாதியான கைலாஷ் சத்யார்த்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘காந்தியின் உடலைதான் கோட்சே கொன்றார். ஆனால், பிரக்யா போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கொன்று வருகின்றனர். அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மையை கொன்று விட்டனர். காந்தி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எனவே, பிரக்யாவை பாஜ.விலிருந்து நீக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: