வாஸ்து வாத்து...

தமிழகத்தின் பழமையான சிறைகளில் ஒன்று சேலம் மத்திய சிறை. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளின் ரிலாக்சுக்காக வாத்து வளர்க்க முடிவு செய்தது சிறை நிர்வாகம். சில வாரங்களுக்கு முன்னாடி ராட்சத தொட்டி கட்டி, அதில் 10 வாத்துக்களை கொண்டு வந்து விட்டுள்ளனர். இதில் ஒன்றும் பிரச்னை இல்லையே என்று கேட்டால், அங்ேக தான் டுவிஸ்ட். அதாவது ேமட்டூர் குடிநீர் ேநரடியாக சிறைக்கு வருகிறதாம். இதில் வாத்துக்கள் நீந்தும் தொட்டிக்கு மட்டும், தினமும் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விடுறாங்களாம். இந்த தண்ணீரை 3 நாட்களுக்கு ஒரு முறை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உத்தரவாம். இந்த வகையில் வாரத்திற்கு 8ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்படுதாம். மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உச்சத்தில் இருக்கு. இந்த நேரத்தில் இப்படி வாத்துக்களை வளர்த்து தண்ணீரை வீணடிப்பது தேவை தானா? என்று கேட்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இது ஒரு புறமிருக்க சிறைத்துறை உயரதிகாரி ஒருவரின் வாஸ்து மோகம் தான், வாத்து வளர்ப்புக்கு காரணம் என்றும் ெகாளுத்திப்போட்டுள்ளனர் சில காக்கிகள்.

Advertising
Advertising

வட்டி தொழிலில் போலீஸ் அதிகாரிகள்

குமரி மாவட்டத்தில் பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் சிலர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றி வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ள அதிகாரிகள் சிலர் என பலரும் இந்த மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்கள், செங்கல்சூளை உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பினருக்கும் லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் கொடுத்து உள்ளார்களாம். இதற்கு மாதந்தோறும் மீட்டர் வட்டி, கந்து வட்டி ரேஞ்சுக்கு பணம் வசூலிக்கிறார்களாம். வட்டி தொழிலுக்காகவே சில போலீஸ் அதிகாரிகள் தனியாக லாட்ஜில் அறை எடுத்து உள்ளார்களாம். கந்து வட்டியை ஒழிக்க வேண்டும். மீட்டர் வட்டியை ஒழிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறையில் உள்ள சிலரே வட்டி தொழிலில் கொடிகட்டி பறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை உளவு பார்த்து, எஸ்.பி.க்கு தகவல் ெசால்ல வேண்டிய எஸ்.பி. உளவுப்பிரிவு போலீசார் சிலரும் கூட வட்டி தொழில் நடத்துவது கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம் என்று விபரம் அறிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள். இது தொடர்பாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பட்டியல் தயாரிக்குமாறு உத்தரவிட்டால், பலரின்  வட்டி பிசினஸ் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.

இன்ஸ்பெக்டரை தூக்கி அடித்த மாஜி ஏடிஎஸ்பி

பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டராக இருந்தவர் திடீரென மாற்றப்பட்டார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இங்கு வந்தவர், வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பே தூக்கி அடிக்கப்பட்டார். இதற்கு பின்னால் பெரிய கதை இருக்கிறது. நெல்லையைச் சேர்ந்த மாஜி ஏடிஎஸ்பி ஒருவர் புகார் தொடர்பாக பாளை. காவல் நிலையத்திற்கு சென்றாராம். அப்போது, அதுகுறித்து முறையாக விசாரிக்காமல் அவரை சுமார் 3 மணி நேரம் உட்கார வைத்தாராம் அந்த இன்ஸ்பெக்டர். ஏடிஎஸ்பி நெல்லையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது, தற்போதைய டிஜிபி தான் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். இதில் அவருக்கும், ஏடிஎஸ்பிக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. பாளை இன்ஸ்பெக்டர் தன்னை மதிக்காமல் நடந்து கொண்டது குறித்து அவர் டிஜிபியிடம் போனில் தெரிவித்தார். உடனே டிஜிபி நெல்லை மாநகர கமிஷனரிடம் தகவல் கூற, கமிஷனர் அடுத்த நொடியே இன்ஸ்பெக்டரை கண்ட்ரோல் ரூமுக்கு மாற்றி விட்டார். யூனிபார்ம் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான் மரியாதை. 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றாலும் சொந்த டிபார்ட்மென்டிலேயே மரியாதை இல்லையே, அது தான் எனது வெயிட்டை காண்பித்தேன், என ‘கண்’’ சிமிட்டுகிறார் அந்த மாஜி.

போட்ட காச எப்படி எடுக்கிறது...?

கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளில் பலர், மக்களவை தேர்தலையொட்டி இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். ஆனால், ஒரு சப்-டிவிசன் டிஎஸ்பி மட்டும் இடமாற்றம் உத்தரவில் இருந்து தப்பித்து விட்டார். சமீபத்தில், ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான ஒரு புகார் மனுவை கையில் வைத்துக்கொண்டு, குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒவ்வொருவராக வரவழைத்து, அவர்களிடம் ₹50 ஆயிரம், ₹1 லட்சம் என ஆளுக்கு தகுந்தமாதிரி தட்டி எடுத்துவிட்டார். புகார் கொடுத்த நபரை விட்டுவிட்டு, குற்றம்சாட்டப்பட்ட நபர்களை தேடிச்சென்று வசூல் எடுக்கிறார். கோவை மாவட்ட எஸ்.பி. ஆபீசில் இருந்து புகார் மனு ஏதேனும் பரிந்துரை செய்யப்பட்டு வந்தாலும், அதிலும் காசு பார்த்து விடுகிறார். இதெல்லாம் நியாயமா? என யாரேனும் கேள்விகேட்டால், ‘’இந்த சீட்டுல வந்து உட்கார்றதுன்னா... சும்மா சாதாரண காரியமா...? போட்ட காச எப்படி எடுக்கிறது? இதுதான் ஒரே வழி என மார் தட்டுகிறார்.

Related Stories: