கைப்பந்து கூட்டமைப்பு சார்பில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்

சென்னை: இந்திய கைப்பந்து கூட்டமைப்பு சார்பில் முதல்நிலை கைப்பந்து பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைப்பெற்றது. இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில்  கைப்பந்து முதல்நிலை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம் மே 13ம் தேதி தொடங்கியது. சென்னை நேரு விளையாட்டரங்களில் நடைப்பெற்ற இந்த  5 நாட்கள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. பயிற்சி முகாமில் தமிழகத்தை ேசர்ந்த 2 பேர் உட்பட  36 பயிற்சியாளர்களும், 5 ஹாங்காங்கை சேர்ந்த  பயிற்சியாளர்களும் என மொத்தம் 43 பேர் பங்கேற்றனர். இவர்களில் 12 பேர் பெண்கள். அர்ஜூனா, துரோணாச்சார்யா விருது பெற்ற, பயிற்சி மையத்தின் இயக்குநர்களான   ஜி.ஈ.தரன்,  ஏ.ராமாராவ், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் நிர்வாகி  பி.பாலசந்திரன் ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு பயற்சியின் நுணுக்கங்ளை கற்றுதந்தனர்.  இவர்கள் சர்வதேச வாலிபால்  கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்றவர்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Stories: