சென்னையில் தொடங்கியது மாநில அளவிலான ஃபிஸ்ட் பால் போட்டி

சென்னை: சென்னையில் 3வது மாநில அளவிலான  ஃபிஸ்ட்பால் போட்டி  நேற்று முன்தினம் தொடங்கியது.  போட்டியை ஃபிஸ்ட்பால் அகில இந்திய பொதுச் செயலாளர் பால விநாயகம்,  கே.ஆர்.எம் பள்ளி முதல்வர் சிவசக்தி பாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சென்னை பெரம்பூரில் நேற்று முன்தினம் இந்தப் போட்டியில்  தமிழகத்தின் 16 மாவட்டங்களை  சேர்ந்த 320 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு ஃபிஸ்ட்பால் சங்கமும், சென்னை மாவட்ட ஃபிஸ்ட்பால் சங்கமும் இணைந்து நடத்தும் இந்தப்போட்டி தொடர்ந்து 3 நாள் நடைபெறும் இன்று மாலை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அணியில் சேர்க்கப்படுவர். அவர்கள்  விரைவில் ராஜஸ்தானில் நடைபெற உள்ள  தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு  சார்பில்  பங்கேற்பார்கள்.

Advertising
Advertising

Related Stories: