தேசிய நீச்சல் சம்மேளனம் தலைவராக ஜெயபிரகாஷ் தேர்வு

சென்னை: தேசிய நீச்சல் சம்மேளனம்(எஸ்எப்ஐ) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் சங்கத்தின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இச்சங்கத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இதுவரை  சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் ஜெயபிரகாஷ் இருந்தார். பொதுச் செயலாளராக குஜராத்தைச் சேர்ந்த  சோக்‌ஷி மோனலும்,  பொருளாளராக தெலங்கானாவைச் சேர்ந்த மேகலா ராமகிருஷ்ணாவும், துணைத் தலைவர்களாக  கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் சுகுமாறன் உட்பட 5 பேரும்,  இணைச் செயலாளராக கர்நாடகாவைச் சேர்ந்த மோகன் சதீஷ்குமார் உட்பட 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

தேர்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயபிரகாஷ், ‘ சுமார் 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் கிரிக்கெட்டை தவிர்த்து தொழில்முறை விளையாட்டு வீரர்களாக சுமார் 5ஆயிரம் பேர்தான் இருக்கிறன்றனர். பள்ளியில் படிக்கும் விளையாட்டில் தீவிரம் காட்டுகின்றனர். விளையாட்டு இட ஒதுக்கீ–்ட்டில் கல்லூரிகளில் இடம் பிடித்ததும் விளையாடுவதை விட்டு விடுகின்றனர். படிப்பில் காட்டும் ஆர்வத்தை விளையாட்டுகளிலும் காட்ட வேண்டும். விளையாட்டை தொழிலாக கொண்ட வீரர்கள், வீராங்கனைகள் உருவாக வேண்டும். அதற்கான  முன்முயற்சிகளை சங்கம் மேற்கொள்ளும். வரும் 2024ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 5 முதல் 10 நீச்சல் வீரர்கள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவோம்’ என்றார்.

Related Stories: