மகனுக்கு நெருக்கடி ஆண்டாள் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

திருவில்லிபுத்தூர்: தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் எம்பி என, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, குச்சனூர் கோயில் கல்வெட்டில் குறிப்பிட்டதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று காலை 8 மணிக்கு வந்தார். கோயில் வளாகத்தில் உள்ள மூல கருடாழ்வாரை தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆண்டாள் சன்னதியில் கொடிமரத்தை தொட்டு வணங்கிய ஓபிஎஸ், காராம்பசுவிற்கு தாமரை மாலை அணிவித்து வணங்கினார். பின் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தார். பின்னர் குடும்பத்தினருடன், திருவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பில் உள்ள குலதெய்வ கோயிலான பேச்சியம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு உச்சிக்கால பூஜையில் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.

Advertising
Advertising

Related Stories: