இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளில் இரவில் பணப்பட்டுவாடா: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: வாக்காளர்களை வரவழைத்து பணப்பட்டுவாடா நடைபெற்று கொண்டிருக்கிறது. பணத்தை எடுத்து வரும் வாகனம் மின்சாரத்துறையின் வாகனம் ஆகும். 1 மணி நேரம் மின் நிறுத்தம் செய்து, மின்சாரத்துறையின் வாகனத்தை எடுத்து செல்வது போல பணத்தை கொண்டு சென்றுள்ளனர்.ஓட்டப்பிடாரத்திலும், அரவக்குறிச்சியிலும் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக முதலில் தெரியவந்தது. இதே போல் சூலூர், திருப்பரங்குன்றத்தில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. குறிப்பிட்ட 7 அமைச்சர்கள் ஓட்டப்பிடாரத்துக்கு பக்கத்தில் ஓட்டினால் போல் தான் பார்டி ஆபிஸ் உள்ளது. சட்டத்தில் இருந்து தப்புவதற்காக இது போன்று பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: