கல்வெட்டில் எம்பி என பெயர் பொறித்த விவகாரம் ஓபிஎஸ் மகன் ரவீந்திராநாத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்

சென்னை: ஓபிஎஸ் மகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவரும், அமமுக செய்தி தொடர்பாளமான வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: 17வது மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 7வது கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற உள்ளது. அனைத்து கட்ட வாக்குப்பதிவும் ஆணையம் அமைதியாக நடத்த உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் 18ம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்ட உள்ளது.

இதில் வெற்றி பெறுபவர்களே எம்பியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கும். ஆனால் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தீரநாத்குமார், வாக்குகள் எண்ணப்படாத நிலையில் தேனி குச்சனூர் கோயிலில் ரவீந்திராநாத் குமார் எம்.பி. என கல்வெட்டு வைக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தேனி மக்களவை தொகுதிகளில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் முக்கிய காரணியாக உள்ளார். ஆகவே தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்திராநாத் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: