திண்டிவனத்தில் பெற்றோரை கொன்றுவிட்டு ஏ.சி வெடித்ததாக நாடகமாடிய மகன் கைது

விழுப்புரம்: திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் ஏசி வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்து தாய், தந்தை உயிரிழந்ததாக நாடகமாடிய மகன் கோவர்த்தனன் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துக்காக பெற்றோரை கொலை செய்து விட்டு ஏ.சி வெடித்து அவர்கள் உயிரிழந்ததாக கோவர்த்தனன் நாடகமாடினார். பெற்றோரையும் உடன்பிறந்த தம்பியையும் கோவர்த்தனன் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீபா காயத்ரியை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: