ரூ2,350 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது

வாலாஜா: வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(26). இவர் வீட்டில் உள்ள மின்இணைப்பை மும்முனை இணைப்பாகவும் மீட்டரை இடம்மாற்ற செய்யகோரியும் வாலாஜா மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இதுகுறித்து, விசாரணை நடத்திய மின்வாரிய ஆய்வாளர் சரவணன் ரூ2,350 லஞ்சம் கேட்டாராம். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின்பேரில் நேற்று பாலாஜி ரூ2,350ஐ ஆய்வாளர் சரவணனிடம் கொடுத்தார். அப்போது  சரவணனை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: