இத்தாலி ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் பெர்டனஸ் : ஒசாகா, பெடரர் விலகல்

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டன்ஸ் தகுதி பெற்றார். கால் இறுதியில் பெர்டன்சுடன் நேற்று மோதுவதாக இருந்த நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்), காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பெர்டன்ஸ் அரை இறுதிக்கு முன்னேறினார்.

Advertising
Advertising

முன்னணி வீராங்கனைகள் விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), மரியா சக்கரி (கிரீஸ்), கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்), ஜோகன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் மோதவிருந்த நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்), காயம் காரணமாக விலகினார். மற்றொரு கால் இறுதியில் அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீரர் ஜெய் நிஷிகோரியை வீழ்த்தினார்.

Related Stories: