முத்தரப்பு தொடர் பைனல் மழையால் ஆட்டம் பாதிப்பு

டப்ளின்: வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி, கனமழை காரணமாக பாதிக்கப்பட்டது. அயர்லாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் மோதின. லீக் சுற்றின் முடிவில் வங்கதேசம் 4 போட்டியில் 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் 9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறிய நிலையில், அயர்லாந்து 2 புள்ளிகளுடன் கடைசி இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.

Advertising
Advertising

இந்த நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. டப்ளின் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 131 ரன் எடுத்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. ஹோப் 68 ரன் (56 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), அம்ப்ரிஸ் 59 ரன்னுடன் (65 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Stories: