ட்வீட் கார்னர்... மர்ரேவுக்கு ‘சர்’ பட்டம்!

இங்கிலாந்து டென்னிஸ் நட்சத்திரம் ஆண்டி மர்ரே (32 வயது), அந்நாட்டின் உயரிய விருதான ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார். விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக்சில் 2வது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்ததைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பக்கிங்காம் அரண்மனையில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான விழாவில் இளவரசர் சார்லஸிடம் இருந்து விருதினை பெற்றுக் கொண்டார். மனைவியுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ஆண்டி மர்ரே. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

Advertising
Advertising

Related Stories: