விரலில் எலும்பு முறிவு நியூசி. வீரர் டாம் லாதம் களமிறங்குவது சந்தேகம்

வெலிங்டன்: உலக கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் டாம் லாதம், காயம் காரணமாக களமிறங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் நடந்த பயிற்சி போட்டியில் கீப்பிங் செய்தபோது லாதம் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயம் முழுமையாகக் குணமடையாவிட்டாலும், நாளை இங்கிலாந்து பயணமாகும் நியூசிலாந்து அணியுடன் லாதமும் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் மே 25ம் தேதி இந்திய அணியுடன் நடக்கும் பயிற்சி ஆட்டம், மே 28ம் தேதி பிரிஸ்டலில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்கும் பயிற்சி ஆட்டம் மற்றும், உலக கோப்பையில் ஜூன் 1ம் தேதி இலங்கைக்கு எதிரான முதல் லீக் ஆட்டம் (கார்டிப்) என 3 போட்டிகளில் லாதம் விளையாடுவது சந்தேகமே என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. லாதம் முழு உடல்தகுதி பெறாத நிலையில், அவருக்கு பதிலாக டாம் பிளெண்டல் அறிமுக வீரராக இடம் பெறுவார். 1987ல் டேனி மாரிசன் உலக கோப்பை தொடரில் தான் அறிமுகமானார். அதற்குப் பிறகு இந்த பெருமை பிளெண்டலுக்கு கிடைக்க உள்ளது.

Related Stories: