உலக சாம்பியனுக்கு 28.04 கோடி முதல் பரிசு

துபாய்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக 28.04 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், எதிர்வரும் உலக கோப்பை தொடரில் மொத்தப் பரிசுத் தொகையாக 70.11 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பட்டம் வெல்லும் அணிக்கு 28.04 கோடி வழங்கப்படும்.

இறுதிப் போட்டியில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 14.02 கோடியும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 5.60 கோடி கிடைக்கும். இது தவிர லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கும், சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு தனித்தனியே ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Related Stories: