பிஎப் வட்டி எப்போது வரும்? தெரிந்து கொள்ள சுலப வழிகள்

கடந்த நிதியாண்டுக்கு அறிவிக்கப்பட்ட பிஎப் வட்டி, சந்தாதாரர்கள் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவரங்களை பிஎப் இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்

பிஎப் சந்தாதாரர்களுக்கு ஆண்டுதோறும் பிஎப் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2018-19 நிதியாண்டுக்கான தொழிலாளர்கள் வைப்பு நிதிக்கான (பிஎப்) வட்டியை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக மத்திய தொழிலாளர் நலத்துறை உயர்த்தியது. இதன்படி வட்டி கணக்கிடப்பட்டு தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வளவு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை தொழிலாளர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ்: பிஎப் ஆணையத்தில் பதிவு செய்துள்ள சந்தாதாரர்கள், யுஏஎன் எண்ணை 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு அனுப்பலாம்.  EPFOHO UAN ENG என அனுப்ப வேண்டும்.

மிஸ்டு கால்: சந்தாதாரர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், இருப்புத்தொகை எவ்வளவு என்ற தகவல் மொபைல் எண்ணுக்கு வந்துவிடும். பிஎப் இணையதளம்: https://www.epfindia.gov.in/ என்ற இணையதளத்தில் Our Services என்பதில், For Employees என்பதை கிளிக் செய்து பாஸ்புத்தகம் என்பதில் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு உள்ளீடு செய்து தகவல்களை பார்க்கலாம். மொபைல் ஆப்ஸ்: இந்திய அரசு சேவைகளுக்கு ஒரே செயலியாக, உமங் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளர் பெயர், பாஸ்வேர்டு உள்ளீடு செய்து பிஎப் கணக்கு விவரங்களை பார்க்கலாம். இதுதவிர, பிஎப் எம்-சேவா என்ற ஆப்சை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.  ஆனாலும், மேற்கண்ட முறைகளில், மிஸ்டுகால், எஸ்எம்எஸ் அனுப்பினால் பெரும்பாலும் தகவல் வருவதில்லை என சந்தாதாரர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: