தீவிரவாதியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது

கொழும்பு: இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், ஓட்டல்கள் என பல இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. ஐஎஸ் தீவிரவாத இயக்கம் நடத்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். 9 தீவிரவாதிகள் தங்கள் உடம்பில் குண்டுகளை கட்டிக்கொண்டு வந்து வெடிக்க செய்து, இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில், வக்கீலுக்கு படித்த இலங்கை மாணவன் ஒருவரும் தற்கொலைப் படை தாக்குதல் தீவிரவாதியாக செயல்பட்டுள்ளான். அவன் பெயர் அலாவுதின் அகமது மூத் (22). இவனது மனைவிக்கு கடந்த 5ம் தேதி குழந்தை பிறந்ததாக, மூத்தின் தந்தை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: