மத்திய அரசின் விதிகள், கெடுபிடியால் வாகன விற்பனை சரிவு காப்பீடு துறைக்கும் வேட்டு

புதுடெல்லி: வாகன விற்பனை சரிந்ததன் காரணமாக மோட்டார் வாகன காப்பீடு செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.  இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மோட்டார்  வாகனங்கள் விற்பனை 8.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதே மாதத்தில்  கடந்த ஆண்டு விற்பனை 14.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள்  உள்பட அனைத்து வாகனங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளன. பொருளாதார  நிலைமை மந்தமான நிலையில்,  மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடப்பதால், தேர்தல்  முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பில் வாகனங்கள் வாங்குவதில்  பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.  கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  இந்த ஆண்டு கார், சொகுசு வாகனங்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.  இதனால், மோட்டார் இன்சூரன்ஸும் பெரும் அளவில் குறைந்துவிட்டது என்று  ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது காப்பீட்டு துறைக்கும் வேட்டு வைத்துள்ளது.

Advertising
Advertising

 வாகன காப்பீடு சட்டப்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம், வாகனங்களை இயக்குவோர் அல்லது உரிமையாளர்கள் மற்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினால், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும். இந்த இன்சூரன்ஸ் எடுப்பது 17.6 சதவீதத்தில் இருந்து 15.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், விபத்தில் சிக்கிய வாகனம் பழுதானால், அதற்கு இழப்பீடு கிடைக்கும் இன்சூரன்ஸ் எடுப்பது என்பது கட்டாயம் இல்லை.

தனக்கோ அல்லது வாகனத்திற்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெற முடியாது. இந்த இன்சூரன்ஸ் எடுப்பதும் 10.2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. பைக், ஸ்கூட்டர்கள் விற்பனை குறையவில்லை என்றாலும் மந்த நிலையில் நீடிக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலைமையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பைக் வைத்திருப்பர்கள் தங்களது வாகனங்களின் காப்பீடுகளை புதுப்பிப்பதன் மூலம்தான் பெரும்பாலான காப்பீடு வர்த்தகம் நடந்துள்ளதாக, காப்பீட்டு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: