ஜூன் மாதம் தென் கொரியா செல்கிறார் டிரம்ப்....... கொரிய தீபகற்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் தென்கொரிய அதிபர் முன் ஜெ உன்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்தாண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு அணுஆயுத சோதனைகளை கிம் கைவிட்டார்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கிம்-டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து மீண்டும் அணுஆயுத சோதனையை வடகொரியா கையில் எடுத்தது. இந்நிலையில் வருகிற ஜூன் மாத இறுதியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தென்கொரிய அதிபரை சந்தித்து பேச உள்ளார். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories: