இப்படியும் ஒரு நூதன மோசடி பே-டிஎம்மில் பணம் போடுபவரா? உஷார்!: கேஷ்பேக் பயன்படுத்தி ‘மெகா சுருட்டல்’ அம்பலம்

புதுடெல்லி: பே-டிஎம்மில் கேஷ்பேக் சலுகையை பயன்படுத்தி பல கோடி ரூபாயை ஏப்பம் விட்டுள்ளனர்.  ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது என, இருந்த இடத்திலேயே ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. உணவு முதல் உடை, காலணி என அனைத்துமே ஆன்லைன் மயமாகி விட்டது.  2016ல் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகுதான் இப்படி ஒரு விஸ்வரூப வளர்ச்சி. ஆரம்பத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ந்ததற்கு பண தட்டுப்பாடு காரணமாக இருந்தது. இப்போது அப்படி அல்ல. பணப்புழக்கம் முன்பை விட அதிகரித்துள்ளது. இருந்தாலும். டிஜிட்டலுக்கு மாறியதற்கு காரணம் கேஷ்பேக் சலுகை  மழைதான்.  கடைகளில் தள்ளுபடியால் வாடிக்கையாளர்களை கவர்வதை போல, இணையதளம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கேஷ்பேக் சலுகைகள் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கின்றன. பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்,  தள்ளுபடியுடன் கேஷ்பேக் சலுகைகளையும் வாரி வழங்குகின்றனர். அதிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முன்னோடியாக வாலட் வசதியை ெகாண்டு வந்த பே-டிஎம் இந்த சந்தர்பத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. பே-டிஎம் வாலட்டில் பணம் போட்டு வைத்து சின்னச்சின்ன கேஷ் பேக்கிற்கு கூட  சில்லரைக்கு பதில் மொபைல் ஸ்கேன் செய்ய கியூ ஆர் கோடு தேடியவர்கள்தான் அதிகம்.  ஆனால், கேஷ்பேக் சலுகை கிடைக்கவில்லை. வங்கிக்கு பணம் அனுப்பியும் போகவில்லை என பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.

போதாக்குறைக்கு கேஒய்சி விதிகளை பூர்த்தி செய்த பிறகும் பலர் கேஷ்பேக் சலுகையை எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். ஏறக்குறைய புலிவால் பிடித்த கதைாக இது மாறிவிட்டது. பேடிஎம் வாலட்டில் பணத்தை போட்டுவிட்டு கேஷ்பேக்  கிடைக்கிறதா என ஸ்மார்ட்போனை தடவித்தடவி பார்த்தவர்கள், தங்கள் ‘வாலட்’ காலியாகி விட்டதே என்று வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  அப்புறம் எங்கேதான் இந்த கேஷ்பேக் போகிறது என்கிறீர்களா? இங்கேதான் ஒரு மெகா மோசடியே அரங்கேறி இருக்கிறது. பே-டிஎம் நிறுவனம், பே-டிஎம் மால் என்ற ஆன்லைன் ஸ்டோரில் பல பொருட்களை விற்கிறது. இதில்தான்,  பே-டிஎம்  மால் ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் சேர்ந்து 10 கோடி ரூபாய் வரை கேஷ்பேக் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக 10 ஊழியர்களை பே-டிஎம் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பேடிஎம் மால் இணையதளத்தில் பட்டியலிட்டிருந்த 100 வியாபாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். பே-டிஎம் மாலில் கடந்த தீபாவளிக்கு பிறகு சில வியாபாரிகள் அதிகமாக  கேஷ்பேக் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக நடந்த கணக்கு தணிக்கையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பே-டிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கூறியதாவது: கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு, சில சிறு வியாபாரிகள் மிக அதிகமாக கேஷ்பேக் சலுைககளை பெற்றுள்ளனர் என்பது எங்கள் கவனத்துக்கு வந்தது. இதை அடுத்து, மேற்கண்ட பரிவர்த்தனைகள் தொடர்பாக விரிவான கணக்கு தணிக்கை  மேற்கொள்ளுமாறு எங்களது கணக்கு தணிக்கை நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டோம்.

  அப்போது, சில வியாபாரிகள், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து போலியாக ஆர்டர்கள் போட்டு இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். விசாரணையில் ₹5 கோடி முதல் ₹10 கோடி வரை கேஷ்பேக் மோசடி  நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.  கேஷ்பேக் சலுகைகள் பணமாக பே-டிஎம் மால் ஊழியர்களின் வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 10 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம். தவிர, இதில் ஈடுபட்ட 100  வியாபாரிகள் பே-டிஎம் மால் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories: