சர்க்கரை உற்பத்தி 30 மி.டன்களாக சரிய வாய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 30.3 மில்லியன் டன்களாக சரியும் என அமெரிக்க வேளாண்துறை கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு 2018-19 (அக்டோபர் - செப்டம்பர்) ஆண்டில் 33 மில்லியன் டன்களாக இருக்கும். இது இதற்கு முந்தைய ஆண்டின் உற்பத்தியான 34.3 மில்லியன் டன்களை விட குறைவு. இதுபோல் 2019-20ம் ஆண்டிலும்  சர்க்கரை உற்பத்தி 8.4 சதவீதம் சரிந்து 30.3 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

 தொடர்ந்து 2வது ஆண்டாக சர்க்கரை உற்பத்தி குறைவதற்கு, கரும்பு உற்பத்தி சரிவே முக்கிய காரணம். இதுதவிர, மொலாசஸ் உற்பத்தியில் அதிக லாபம் கிடைப்பதால், சர்க்கரை ஆலைகள் அதில் அதிக கவனம் செலுத்த தொடங்கி விட்டன.  இதனால் இந்த ஆண்டும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே சர்க்கரை உற்பத்தி இருக்கும் என அமெரிக்க வேளாண்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: