உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி அமைப்பது எப்படி?: 2வது அரசாணை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை, மே 16: வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் தமிழக அரசும் மாநில தேர்தல் ஆணையமும் வழக்கு, வாக்காளர் பட்டியல் உள்பட பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. அதற்கு பதில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதுவரை ஐந்து முறை இவர்களின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்து கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான வழிமுறைகளை கடந்த வாரம் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது  தொடர்பான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக  ெவளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:
Advertising
Advertising

டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் ஒரு வார்டில் 1200 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 1400 வாக்காளர்களும் இருந்தால் ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில்  1200 முதல் 2400 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 1400 முதல் 2800 வாக்காளர்களும் இருந்தால் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். இந்த வாக்காளர்கள் அனைவரும் ஒரு பகுதிக்குள் வந்தால் ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் அமைக்க வேண்டும். இரண்டு பகுதிக்குள் இருந்தால்   அனைவரும் வாக்களிக்கும் வகையில் அந்த வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 2400 முதல் 2600 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 2800 முதல் 4200 வாக்காளர்களும்  இருந்தால் அந்த வார்டில் 3 வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். இந்த வார்டில் இரண்டு பகுதிகள் இருந்தால் ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், , அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகைகளில் ஒரு வாக்குச்சாவடி என்று மூன்று வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். மூன்று பகுதிகளில் இருந்தால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைவரும் வாக்களிக்கும் வகையில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளின் தயார் செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடவில்லை என்று செயல் அலுவலர், நகராட்சி ஆணையர் ஆகியோர் உறுதி அளிக்க வேண்டும். மாநகராட்சிகளில் தயார் செய்யப்பட்ட வாக்குச்சாவடியின் பட்டியல் இருந்து எந்த ஒரு வாக்காளரும் விடுபடவில்லை என்று வருவாய் அலுவலர் அல்லது மாநகராட்சி ஆணையர் உறுதி அளிக்க வேண்டும். இந்த பட்டியல் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் , 3ம் நிலை நகராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரது அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் மற்றும் அலுவலக பயன்பாடு, பொது மக்கள் மற்றும் ேவட்பாளர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்ேவறு ேதவைகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியின் பட்டியலையும் 100 காப்பிகள் படியெடுத்து வைத்திருக்க வேண்டும்.

Related Stories: