மோடியை ராகுல் சந்திக்கிறார் என்றால் பாஜவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க முடியுமா?: தமிழிைசக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கேள்வி

சென்னை,  மே 16: மோடியை ராகுல் காந்தி சந்தித்தார் என்பதற்காக பாஜவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க முடியுமா என்பதை தமிழிசை சொல்லவேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தீவிரவாதம் குறிப்பிட்ட மதத்தில் மட்டும் இல்லை. அனைத்து மதத்திலும் தீவிரவாதம் இருக்கிறது. மோடி தலைமையிலான 5 ஆண்டுகால பாஜ ஆட்சியில் அவர் செய்த சாதனைகள் குறித்து பேசாமல் மக்களை சாடுவதும் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவது போன்ற தரம் தாழ்ந்த அரசியலை பிரதமர் செய்கிறார். மோடியின் பிரசாரத்தை கண்டு அனைவரும் சிரிக்கின்றனர்.

தமிழிசை என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக பிரகடனம் செய்தவரே திமுக தலைவர் ஸ்டாலின்தான். அப்படியிருக்கையில் அவர் எப்படி பாஜவுடன் கூட்டணி பற்றி பேச முடியும். தமிழிசை கூறியது வடிகட்டிய பொய். 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் ஆகும். சந்திரசேகர ராவை திமுக தலைவர் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. பிரதமர் மோடியை கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்கிறார். அதற்காக பாஜவும் காங்கிரசும் கூட்டணி வைத்துக் கொள்ள முடியுமா?  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: