×

தமிழகத்தில் வாட்டிவதைக்கும் கத்திரி வெயில்...... இன்று 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு

சென்னை: தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வேலூரில் 106.7, மதுரையில் 106.1, பாளையங்கோட்டையில் 104.1, கரூர் பரமத்தியில் 105.4, திருச்சியில் 105.2, சேலத்தில் 101.4, தொண்டியில் 101, சென்னையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கத்திரி வெயில் வாட்டி வதைத்தாலும், ஒருசில பகுதியில் கோடை மழை பெய்துள்ளது. திண்டுக்கல், விருதுநகர், சிவகாசி, உள்ளிட்ட பகுதியில் இன்று மழை பெய்தது.

கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில் படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்ற வெயில் தற்போது சற்று குறைந்துள்ளதுடன் மழையும் பெய்வது வெப்பத்தின் அளவை சற்று குறைத்துள்ளது. இருப்பினும் கத்திரி வெயில் காலம் 29ம் தேதி வரை நீடிப்பதால் மேலும் வெயில் உயரவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில் எல்நினோ என்னும் கடல் மட்ட வெப்பம் அதிகரித்து  வருவதும் ஓரு காரணம் என்று கூறுகின்றனர். அதனால் கடல் மட்டத்தில் வெப்பம் பரவும் என்றும் கடலில் இருந்து தரைப் பகுதி நோக்கி வரும் காற்றின் ஈரப்பதம் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.


Tags : Tamil Nadu ,places , heat, Chennai, Tamil Nadu,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...