×

சூடான தேர்தல் பிரசாரத்தின் மத்தியில் பிரியங்காவின் சேலையை கண்டு மயங்கும் பெண்கள்: சமூக ஊடகங்களில் புகழ்ந்து தள்ளும் விவாதம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்ெசயலாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டபின், அவர் குறித்து தினமும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான சேலை அணிந்து, மக்களோடு மக்களாக ேதர்தல் பிரசாரத்தில் பெண் வாக்காளர்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் மத்தியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பேச்சு மற்றும் அவரது புடவையின் தோற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, பல்வேறு பெண்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதில், ‘காட்டன் சேலையோ அல்லது பச்சை நிற சேலையோ அல்லது கைத்தறி சேலையோ பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கும் சேலையின் வண்ணத் தேர்வு மிகவும் நன்றாக இருக்கிறது’ என்றும், ‘பிரியங்கா காந்திக்கு முன்பு, தென்னிந்தியாவின் வலுவான தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா பெரும்பாலும் பச்சை புடவைகளில் காணப்பட்டார்’ என்றும் பலவித கருத்துகளை கூறியுள்ளனர்.

தற்போது பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார். அவர் பிரசாரத்தின் போது அதிக அளவில் புடவைகளில் மட்டுமே காணப்படுகிறார். அதனால், சாமானிய இளம் பெண் வாக்காளர்களிடம் பிரியங்காவின் எளிமையான புடவை தேர்வு, தங்களை ஈர்த்துள்ளதாகவும், அதேவேளையில் கம்பீரமானதாக காணப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், புடவை வடிவமைப்பு மற்றும் அவற்றின் நிறம் வரை பிரியங்காவின் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது. பிரியங்கா காந்தியை பார்க்கும் போது அவரது பாட்டி இந்திரா காந்தியை நினைவுப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, ‘கங்கை யாத்ரா’ பிரசாரத்தில் பிரியங்கா ஒரு பச்சை புடவையில் காணப்பட்டார். அந்த புடவையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. பிரியங்கா அணிந்துள்ள சேலை போலவே, தாங்களும் வண்ண வண்ண சேலைகளை வடிவமைத்து வடமாநில ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் கடையினர் விற்பனை செய்து வருகின்றனர். இன்றைய சூடான தேர்தல் களத்தில், பிரியங்காவின் புடவை ரசனை வடமாநில பெண் வாக்காளர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : fray ,Priyanka , Priyanka Gandhi, Sushma Swaraj
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...