கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிஷரத்: கொல்கத்தாவில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மம்தா அரசு மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் 17வது  மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள்  முடிவடைந்துள்ளது. இறுதிகட்ட தேர்தல் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மேற்கு வங்கத்தின் பிஷரத் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேச்சுவதாவது; கொல்கத்தாவில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மம்தா அரசு மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பழிவாங்குவேன் என்று மம்தா பானர்ஜி கூறியதை செயல்படுத்திவிட்டதாக தெரிவித்தார். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ஊடுருவல்கள் முற்றிலும் தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பெரும்பாண்மை கிடைக்கும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

சகோதரி மம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தாவின் பதற்றத்தை பார்க்கும் போது பாஜகவுக்கு 300 இடங்களில் மேல் பெருபான்மையுடன் வெற்றி பெரும். மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையைக் மம்தா பானர்ஜி நெரித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.


× RELATED முதல்வர் எடப்பாடி சென்னை...