உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த கும்பல்: பொதுமக்கள் அதிர்ச்சி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மணமகனின் குடும்பத்தினரை, கோவிலுக்குள் நுழையவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் அமோரா மாவட்டத்தில் வசித்துவரும் ஷோபித் ஜாதவ் என்பவர் பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆவார். இந்நிலையில், தனது திருமணத்திற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பி கோவிலுக்கு சென்றார். ஆனால், அங்கிருந்த சிலர், ஷோபித் மற்றும் அவரது குடும்பத்தினரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாகவும், மணமகன் கழுத்தில் போடப்பட்டிருந்த பண மாலையை பிய்த்து எரிய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து மணமகனின் தந்தை காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். புகார் அடிப்படையில் கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாதி பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடக்கவில்லை எனவும் திருமணத்திற்கு முன்னர் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றது எனவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்பில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோன்ற சம்பவம் அப்பகுதியில் நடப்பது இதுவே முதல்முறை என்று  அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.× RELATED வழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு